தேனி, ஜூலை 26: தேனி அருகே ஜவுளி வியாபாரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார்.தேனி அருகே பழனிசெட்டிபட்டி முத்துநகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் சிவபாலன்(47). ஜவுளி வியாபாரி. இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லை அதிகமானது. மேலும், மது பழக்கத்திற்கும் ஆளானார். அடிக்கடி மதுபோதையில் தனது மனைவி யமுனாவுடன் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் காலை தனது மனைவியுடன் மீண்டும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிவபாலன் தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஜவுளி வியாபாரி தற்கொலை appeared first on Dinakaran.
