ராமநாதபுரம், ஜூலை 26: விருதுநகர் மாவட்டம், அம்மன்பட்டியைச் சேர்ந்த நல்லுக்குமார் (23), கமுதி கோட்டைமேட்டில் தாயாருடன் வசித்து வந்தார். இவர், கமுதி-திருச்சுழி சாலையில் உள்ள மரக்குளம் கருமேனியம்மன் கோயில் பின்புறம் ஜூலை 16ம் தேதி கொலை செய்யப்பட்டநிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மண்டலமாணிக்கம் போலீசார் குருவி ரமேஷ்(28), மற்றும் கமுதியை சேர்ந்த மூர்த்தி(25) ஆகிய இருவரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மரக்குளத்தைச்சேர்ந்த மணிவண்ணன்(30), அம்மன்பட்டியை சேர்ந்த பிரித்விராஜ்(23) ஆகிய இருவரை கமுதி அருகே நரசிங்கம்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த போது போலீசார் கைது செய்தனர்.
The post இளைஞர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.
