உலக ஐவிஎஃப் தினம்: பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில் சிறப்பு முகாம்

பழநி, ஜூலை 26: பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தையில்லா தம்பதியர் ஐவிஎஃப் சிகிச்சை மூலம் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் ஜூலை 25ம் தேதி உலக ஐவிஎஃப் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதன் காரணமாக நேற்று உலக ஐவிஎஃப் தினத்தையொட்டி பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில் குழந்தையின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் பங்கேற்கும் தம்பதியருக்கு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி வரை 30 நாட்களுக்கு ஐபிஎஃப் சிகிச்சை ரூ.50 ஆயிரம் என்ற சிறப்பு கட்டணத்தில் வழங்கப்படுகிறது. பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் செந்தாமரைச்செல்வி அறிவுறுத்தலின்படி, மருத்துவமனையின் இயக்குநர்கள் டாக்டர் பாலாஜி குமரவேல், டாக்டர் அர்ச்சனா ஆறுமுகம், டாக்டர் ஜமீலா திரவியம் தலைமையிலான மருத்துவ குழுவினர் குழந்தையில்லாத தம்பதியருக்கு ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டனர். ஐவிஎஃப் சிகிச்சை தேவைப்படுவோர் கண்டறியப்பட்டு, ஐவிஎஃப் சிகிச்சை முறை மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

The post உலக ஐவிஎஃப் தினம்: பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தில் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: