பள்ளி, கல்லூரிகளுக்கு ஆக.6 உள்ளூர் விடுமுறை

 

சேலம், ஜூலை 26: சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி வரும் ஆகஸ்ட் 6ம் தேதி, பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.  சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாநகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 6ம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப் படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளில், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு, அன்றைய தினம் சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆகஸ்ட் 23ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

Related Stories: