நன்றி குங்குமம் தோழி
பொதுவாக நம் வீடுகளில் தரை, பாத்திரங்கள், துணிகள் முதலியவற்றை தினசரி சுத்தம் செய்கிறோம். ஆனால், நம் கண்களுக்கு தெரியாமல், உணரவும் முடியாமல் கிருமிகள் அதிகம் வாழும் சில விஷயங்கள் உள்ளன. அவற்றை கவனத்தில் கொண்டு வருவதுதான் இந்தக் குறிப்புகள்.
*கால் மிதியடிகள், இவை பல கிருமிகளை தன் வசம் வைத்துக் கொண்டு பல நோய்களை பரப்பி வருகின்றன. எனவே, அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியவைகளில் முதலிடம் பெறுகிறது.
*கதவுகளின் கைப்பிடிகள், குறிப்பாக கழிவறைக் கதவுகளில் உள்ள கைப்பிடிகள், கிருமிகளின் சொர்க்கபுரியாக இருக்கும். எனவே, பீரோ, ஃபிரிட்ஜ் அறைக் கதவுகளின் கைப்பிடிகளை அவ்வப்பொழுது சுத்தப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
*வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் பொருள் டிவி ரிமோட். பல வீடுகளிலும் குழந்தைகள் ரிமோட்டை எடுத்து வாயில் வைத்து விளையாடும் பழக்கம் உள்ளது. எனவே, அதனை உலர்ந்த துணியை கொண்டு அடிக்கடி சுத்தம் செய்தால் குழந்தைகளை பல நோய்களிலிருந்து காக்கலாம்.
*வீட்டை சுத்தப்படுத்தும் மாப்- இதனை பயன்படுத்தியதும், அப்படியே உலர்த்தாமல் சோப்புத் தண்ணீரில் துவைத்து சுத்தமான நீரில் அலசி காய வைக்க வேண்டும்.
*வீட்டில் குளிக்க பயன்படுத்தும் பக்கெட் மற்றும் ஜக்குகளை அடிக்கடி நன்கு தேய்த்து கழுவி சூரிய வௌிச்சத்தில் காயவைப்பது மிகவும் அவசியமாகும்.
தொகுப்பு: லட்சுமி வாசன், சென்னை.
The post அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டிய சில விஷயங்கள்! appeared first on Dinakaran.
