சென்னை: 12ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய மாணவர்கள் இன்று முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். www.dge.tn.gov.in-ல் 12ம் வகுப்பு துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம். விடைத்தாள் நகல் பெறும் விரும்புவோர் ஜூலை 28, 29ல் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்தை அணுகி பெறலாம். ஒவ்வொரு பாடத்துக்கும் விடைத்தாள் நகல் பெற ரூ.275 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள் நகல் கோரும் தேர்வர்கள் மட்டுமே மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இயலும்.
The post 12ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய மாணவர்கள் இன்று முதல் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கலாம் appeared first on Dinakaran.