உடல் எடை குறைக்க முயற்சி: மாணவன் மூச்சுத்திணறி சாவு

குளச்சல்: குமரி மாவட்டம் குளச்சல் அருகே பரனட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன் (54). சுங்கத் துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சக்தீஸ்வர் (17). பிளஸ் 2 முடித்துவிட்டு திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்வதற்காக இருந்தார். இந்நிலையில் சக்தீஸ்வர் உடல் எடை அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. உடல் எடையை குறைக்க யூடியூப்பை பார்த்து அவர் கடந்த ஒரு மாதமாக வேறு எந்த உணவும் சாப்பிடாமல் பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே சக்தீஸ்வருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சக்தீஸ்வருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. உடனே பெற்றோர் அவரை மீட்டு குளச்சலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சக்தீஸ்வர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

The post உடல் எடை குறைக்க முயற்சி: மாணவன் மூச்சுத்திணறி சாவு appeared first on Dinakaran.

Related Stories: