விருப்ப ஓய்வு கோரி திருச்சி டிஎஸ்பி கடிதம்?

திருச்சி: திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு 2ல் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், உள்துறை செயலாளருக்கு விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி கடிதம் அனுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் நேற்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில், நான் (பரத் ஸ்ரீனிவாஸ்), தமிழ்நாடு காவல் துறையில் கடந்த 1997ம் ஆண்டு எஸ்ஐ பணியில் சேர்ந்தேன்.

தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு 2ல் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறேன். என் குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக என்னால் பணி செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, நான் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புகிறேன். நான் விருப்ப ஓய்வில் செல்ல எனக்கு அனுமதி வழங்குமாறு அய்யா அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

The post விருப்ப ஓய்வு கோரி திருச்சி டிஎஸ்பி கடிதம்? appeared first on Dinakaran.

Related Stories: