மும்பை: ஆன்லைன் ரம்மி செயலி விளம்பரத்தில் நடித்த விவகாரத்தில் நடிகர் ராணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி ஆஜராக நடிகர் ராணாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சூதாட்ட செயலிகளை ஊக்குவித்ததாக சோசியல் மீடியா இன்ப்ளூயன்ஸ் செய்ததாக தெலங்கானாவில் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் முக்கியமாக ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால் போன்ற பல முன்னணி திரைபிரபலங்கள் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியான நிலையில், நடிகர்களுக்கு எதிராக தொழிலதிபர் பனிந்திர சர்மா புகார் தெரிவித்திருந்தார். மேலும் பணம் பெற்றுக் கொண்டு சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்து மக்களை தவறாக வழி நடத்தியதாக நடிகர்களுக்கு எதிராக தொழிலதிபர் குற்றம் சாட்டினார். மேலும் இந்த செயலிகளில் பலர் கடினமாக சம்பாதித்த பணத்தை இழந்துவிட்டதாகவும் புகார்தாரர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் நடிகர்கள் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புகாரின் அடிப்படையில் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி , பிரனீதா, நிதி அகர்வால், அனன்யா நாகல்லா, சிரி ஹனுமந்து, ஸ்ரீமுகி, வர்ஷினி சௌந்தரராஜன், வசந்தி கிருஷ்ணன், ஷோபா ஷெட்டி, அம்ருதா சவுத்ரி, நயனி பவானி, நேஹா பதான், பாண்டு, பத்மாவதி, சா ப்ரினி, பத்மாவதி, விஷ்ணு, விஷ்ணு, விஷ்ணு, விஷ்ணு, நான் ஷியாமளா, டேஸ்டி தேஜா, மற்றும் பண்டாரு ஷேஷாயனி சுப்ரிதாம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய்தேவரகொண்டா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. வரும் 30ம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜ், ஆகஸ்ட் 6ம் தேதி விஜய் தேவரகொண்டா மற்றும் ஆகஸ்ட் 13ம் தேதி மஞ்சு லட்சுமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ராணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி ஆஜராக நடிகர் ராணாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று விசாரணைக்கு ஆஜராகவிருந்த நிலையில் நடிகர் ராணா அவகாசம் கேட்டிருந்தார்.
The post ஆன்லைன் ரம்மி செயலி விளம்பரத்தில் நடித்த விவகாரத்தில் நடிகர் ராணாவுக்கு சம்மன் appeared first on Dinakaran.
