
டெல்லி: பொதுத்துறை வங்கிகள் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடன் தள்ளுபடிகள் குறித்து கூறியதாவது”பொதுத்துறை வங்கிகள் கடந்த 2015-16 முதல் 2024-25 வரையிலான 10 ஆண்டுகள் ரூ.12 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் ரூ.5.82 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.1.14 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. எஸ்.பி.ஐ.க்கு அடுத்தபடியாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.85, 540 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8, 1243 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. அதே போல் கனரா வங்கி ரூ.56, 491 கோடியும், பேங் ஆப் பரோடா ரூ.70,061 கோடி கடன்களையும் கடந்த 5 ஆண்டுகளில் தள்ளுபடி செய்துள்ளன.மேலும் பொதுத்துறை வங்கிகள் 1,600க்கும் மேற்பட்ட பெருநிறுவனக் கடன் வாங்குபவர்களை கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களாக வகைப்படுத்தியுள்ளன, அவர்கள் கிட்டத்தட்ட 1.63 லட்சம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பொதுத்துறை வங்கிகளால் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.
