×

வீரகனூர், கெங்கவல்லியில் ஏரியில் மணல் அள்ளி கடத்திய 5 பேர் கைது: 4 டிராக்டர், டிப்பர் லாரி பறிமுதல்

கெங்கவல்லி, ஜூலை 23: வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சொக்கனூர் கிராமத்தில், வீரகனூர் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் போலீசார், ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அனுமதியின்றி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கனூர் கிராமத்தில் உள்ள ஏரியில் களிமண் எடுத்து வந்தது தெரிந்தது. விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முத்துசாமி மகன் செல்லையா(40) என்பவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 யூனிட் களிமண், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைத்துள்ளனர்.

அதேபோல், கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி ஏரியில் 50க்கும் மேற்பட்ட டிராக்டரில் அனுமதியின்றி கிராவல் மணல், ஆற்று மணல், செம்மண் அள்ளுவதாக வந்த தகவலின் பேரில், கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் (பொ) ராணி தலைமையில், எஸ்ஐ கணேஷ்குமார், தலைமையிலான போலீசார் சாத்தப்பாடி கிராமத்தில் ஏரியை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் பலர் டிராக்டரை எடுத்து தப்பி சென்றனர். அப்போது நான்கு டிராக்டர்களை மணலுடன் பறிமுதல் செய்தனர்.

அதனை கெங்கவல்லி போலீஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். இது குறித்து சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிமுத்து(59), கந்தசாமி(49), பெரியசாமி(54), சிவக்குமார்(51) ஆகிய 4பேரை போலீசார் கைது
செய்தனர்.

The post வீரகனூர், கெங்கவல்லியில் ஏரியில் மணல் அள்ளி கடத்திய 5 பேர் கைது: 4 டிராக்டர், டிப்பர் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Veeraganur ,Kengavalli ,Inspector ,Rani ,Sokkanoor village ,Veeraganur Panchayat ,Venganur ,Perambalur ,Veeraganur, Kengavalli ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்