×

ரூ.1 லட்சம் லஞ்சம் பொதுப்பணித்துறை அதிகாரி கைது

சேலம்: சேலம் ஜாரிகொண்டலாம்பட்டியை சேர்ந்த பொதுப்பணித்துறை எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டரான சண்முகம், அரசு பள்ளிகளுக்கான எலக்ட்ரிக்கல் ஒப்பந்தத்தை கேட்டிருந்தார். இந்த பணியை ஒதுக்க,ரூ.1 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று பொதுப்பணித்துறை முதுநிலை வரைவு தொழில் அலுவலர் ரவி (55) கேட்டுள்ளார்.

இதுகுறித்து சண்முகம், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார்.அதிகாரி ரவி கூறியபடி இன்னொரு கான்ட்ராக்டரான பிரகாசிடம் (45) பணத்தை நேற்று கொடுத்தார். பிரகாஷ், அதை அதிகாரி ரவியிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார் அதிகாரி ரவி, கான்ட்ராக்டர் பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

The post ரூ.1 லட்சம் லஞ்சம் பொதுப்பணித்துறை அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : Public Works Department ,Salem ,Shanmugam ,Jarikondalampatti ,Ravi ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...