×

வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்வு!!

டாக்கா: வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று மதியம் 1 மணிக்கு அந்த நாட்டின் விமான படை விமானம் (எப்.7 பிஜிஐ) பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. உத்தரா என்ற இடத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானம் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் நொறுங்கி விழுந்து தீப்பற்றி எரிந்தது. விமான விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நொறுங்கி விழுந்து தீப்பிடித்த விமானத்தில் தீ மளமளவென எரிந்தது. தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

வங்கதேச தீயணைப்பு துறையின் இயக்குனர் ஜெனரல் சாகீத் கமால்,‘‘ விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் 27 உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், ஆசிரியர்கள். தீக்காயம் மற்றும் இதர காயங்கள் ஏற்பட்ட 170 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விமானத்தை இயக்கிய பைலட் முகமது தவ்கீர் இஸ்லாம் ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 260 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

The post வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Dhaka ,Air Force ,Uttara ,Dinakaran ,
× RELATED இந்திய பொருட்கள் மீதான வரியை நீக்கக்...