×

செங்கம் சந்தையில் ஆடி மாதம் என்பதால் ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம்: ஆடு, கோழி விற்பனை அதிகரிப்பு

செங்கம், ஜூலை 22: ஆடி மாதம் என்பதால் செங்கத்தில் நடந்த சந்தையில் ஆடு, கோழிகள் சுமார் ரூ.10 லட்சத்திற்கு விற்பனையானது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஆடு மற்றும் கோழி விற்பனை சந்தை நடைபெறும். இந்த சந்தையில் செங்கம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள், நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் ஆடு மற்றும் கோழிகளை விற்பனை செய்வார்கள். சந்தைக்கு வெளியூர் மற்றும் வெளி மாவட்ட, வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து இவற்றை வாங்கிச்செல்வார்கள்.

இந்நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் குலதெய்வ கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்பட பல திருவிழாக்கள், காதணி விழா உள்ளிட்டவை அதிகளவில் நடைபெறும். இதனால் இந்த மாதம் ஆடு, கோழிகளின் விற்பனை அதிகளவில் இருக்கும். அதேபோல் செங்கத்தில் நேற்றுமுன்தினம் நடந்த சந்தையில் அதிக அளவில் ஆடு, கோழிகள் விற்பனையானது. இதனால் ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடி மாதம் என்பதால் கோழி மற்றும் ஆடு விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post செங்கம் சந்தையில் ஆடி மாதம் என்பதால் ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம்: ஆடு, கோழி விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Audi ,Sengam ,CHENGAM ,CHENGAL ,Chengka, Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...