×

வீடுகளில் புகுந்த 3 பாம்புகள் மீட்பு

ஓமலூர், ஜூலை 22: ஓமலூர் அருகே அம்மன்கோயில்பட்டியை சேர்ந்த ராஜசேகர் என்பவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வீரர்கள், வீட்டு சோபாவில் பதுங்கி இருந்த சுமார் 7அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்தனர். அதேபோல், கருப்பூர் அருகே டால்மியா போர்டு பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் வீட்டில் பாம்பு ஒன்று புகுந்தததாக, ஓமலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தன் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் புகுந்து 4அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்தனர். தாரமங்கலம் அருகே, துட்டம்பட்டி கொடியன் வளவில் வசிக்கும் அம்மாசி வீட்டில் புகுந்த சாரை பாம்பையும் மீட்டனர். இதையடுத்து பிடிபட்ட பாம்புகளை வனப்பகுதியில் விட்டனர்.

The post வீடுகளில் புகுந்த 3 பாம்புகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Omalur ,Rajasekar ,Ammankoilpatty ,Omalur Fire Station ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்