×

கல்லூரி மாணவர்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகம்

இடைப்பாடி, ஜூலை 22: சேலம் மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், இடைப்பாடி அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை குறித்து துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் கண்ணன், இடைப்பாடி நகரமன்ற தலைவர் பாஷா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில மாணவரணி துணை செயலாளர் தமிழரசன், திமுக மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜா சண்முகம் முன்னிலை வகித்தனர். அப்போது, தமிழக முதல்வரின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் மாணவ, மாணவிகள் சேர வேண்டும் என கூறி துண்டுபிரசுரங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியின்போது, திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

The post கல்லூரி மாணவர்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Salem West District DMK Student Union ,Edappadi Government College ,Tamil Nadu DMK ,Kannan ,West District DMK Student Union ,Edappadi… ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்