ஓசூர், ஜூலை 22: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து டூவீலரில் வந்த 2 வாலிபர்களை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர்கள் ஒரு கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. விகாரணையில், அவர்கள் சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (20), காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் பகுதியை சேர்ந்த சரவணன்(24) என்பதும், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.
The post ஓசூரில் டூவீலரில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.
