திருப்பூர், ஜூலை 22: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 469 கோரிக்கை மனுக்களை வழங்கியிருந்தனர்.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் இயற்கை மரணம் அடைந்த 2 நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.30,000 மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற 16 மாணவர்களுக்கும், தமிழ்நாடு விழாவை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற 6 மாணவர்களுக்கு என 22 மாணவர்களுக்கு 92 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post கட்டுரை, பேச்சுப் போட்டி மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு appeared first on Dinakaran.
