×

நகராட்சி தார்சாலை ஆக்கிரமித்து கழிவுநீர் தொட்டி; அகற்ற மக்கள் கோரிக்கை

 

காங்கயம், ஜூலை 22: காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு, சக்திநகர் 4வது வீதியில் தனியார் ஒருவர் மூன்று அடுக்கு கட்டிடத்தை கட்டியுள்ளார். இதற்கான கழிவுநீர் தொட்டியை நகராட்சி தார்சாலை மற்றும் பொதுஇடத்தை ஆக்கிரமிப்பு செய்து 5 அடி அகலமும், 15 அடி நீளமும், 10அடி ஆழமும் உள்ள கழிவுநீர் தொட்டியை கட்டி உள்ளார். இத்தொட்டிக்குள் சுமார் 50க்கும் மேற்பட்ட பக்கவாட்டுக் குழாய்களை அமைத்து கழிவுநீர் வெளியேறும்படி செய்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் பூமி பாதிக்கப்படும். நிலத்தடி நீர் பாதிக்கப்படும். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள தார்சாலையில் சுமார் 2 அடி வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்‌ என புகார் அளித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து காங்கயம் நகராட்சி ஆணையர் பால்ராஜ் உத்தரவின்பேரில் உதவிப்பொறியாளர் மற்றும் நகராட்சி பணியாளர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

The post நகராட்சி தார்சாலை ஆக்கிரமித்து கழிவுநீர் தொட்டி; அகற்ற மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Shakthi Nagar 4th Street, 15th Ward ,Kangayam Municipality ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...