×

செல்போனில் பேசுவதற்கு சென்றபோது விபரீதம் நள்ளிரவில் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு: தந்தையும் இல்லாததால் குழந்தைகள் பரிதவிப்பு

 

சென்னை, ஜூலை 22: சூளைமேடு வீரமணி பாண்டி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ஷர்மிளா (40). தனியார் ஓட்டல் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தூங்கிய ஷர்மிளாவுக்கு நள்ளிரவு செல்போன் அழைப்பு வந்தது. 2 பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்ததால் ஷர்மிளா செல்போனில் பேசியபடி வீட்டின் 3வது மாடிக்கு சென்றார். அதன் பிறகு அவர் கீழே இறங்கி வரவில்லை.
தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தைகள், தாயை தேடி வெளியில் வந்து பார்த்தபோது, ஷர்மிளா ரத்த வெள்ளத்தில் சுய நினைவின்றி கீழே கிடந்தார். அருகில் உள்ளவர்கள் உதவியுடன் தாயை மீட்டு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த சூளைமேடு போலீசார், ஷர்மிளா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, ஷர்மிளாவிடம் கடைசியாக பேசிய நபர் யார், அவரை தற்கொலைக்கு தூண்டும் வகையில் யாரேனும் பேசினாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செல்போனில் பேசுவதற்கு சென்றபோது விபரீதம் நள்ளிரவில் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு: தந்தையும் இல்லாததால் குழந்தைகள் பரிதவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sharmila ,2nd Street ,Chulaimedu Weeramani Bandi Nagar ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு