×

குளத்தில் மூழ்கி மாணவன் பலி

 

திருவொற்றியூர், ஜூலை 22: மணலி புதுநகர், விச்சூர் பகுதியை சேர்ந்த ரோஹித் ரோஷன் (10), என்ற சிறுவன், அதேபகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள கோயில் குளத்தின் படிக்கட்டில் நின்றிருந்த சிறுவன், எதிர்பாராத விதமாக குளத்தில் விழுந்து நீரில் மூழ்கினான். மாலையில் அவ்வழியே சென்ற சிலர் குளத்தில் ரோஹித்ரோஷன் சடலமாக மிதப்பதை கண்டு, மணலி புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post குளத்தில் மூழ்கி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvottriyur ,Rohit Roshan ,Vichur ,Manali Pudunagar ,School ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு