×

பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்: ஆடி கிருத்திகை விழா

பெரணமல்லூர், ஜூலை 21: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று ஆடி கிருத்திகை பெருவிழா சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதன்படி, பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் கிராமம், தீர்க்காஜல ஈஸ்வரர் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை திருவிழா 2 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

அதன்படி, நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு மூலவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் பால்குட ஊர்வலம் சென்று சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர், சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து வீதியுலா வந்தார். அப்போது, பக்தர் அந்தரத்தில் தொங்கியபடியும், முதுகில் அலகு குத்தி தேரை இழுத்து கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆடி கிருத்திகை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

இதேபோல், கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் உள்ள சுயம்பு சுப்பிரமணிய சுவாமி கோயில், செய்யாறு அடுத்த எச்சூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை பெருவிழாவையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

The post பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்: ஆடி கிருத்திகை விழா appeared first on Dinakaran.

Tags : Aadi Krithigai festival ,Peranamallur ,Murugan ,Tiruvannamalai ,Aadi Krithigai festival with ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...