- ஜனநாயக மகளிர் சங்க மாவட்ட மாநாட்டு பேரணி
- திருப்பூர்
- 17வது திருப்பூர் மாவட்ட மாநாடு
- அனைத்து
- இந்தியா
- ஜனநாயக மகளிர் சங்கம்
- அனுப்பர்பாளையம் புதூர்
- திலக் நகர்
- தின மலர்
திருப்பூர், ஜூலை 21: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 17-வது மாநாடு அனுப்பர்பாளையம் புதூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு மாதர் விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை திலகர் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து தொடங்கியது. மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் மருத்துவர் மரகதம் சாமிநாதன் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதர் சங்க மாநில துணைத்தலைவர் பாலபாரதி, மாநில பொருளாளர் பிரமிளா, மாவட்டத்தலைவர் பவித்ரா தேவி, மாவட்ட செயலாளர் பானுமதி, பொருளாளர் கவிதா உள்பட திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பெண்கள் சுமார் 1000 பேர் பேரணியாக அணிவகுத்து பெரியார் காலனி கேபி ஜானகி அம்மாள் நினைவுத்திடலை அடைந்தனர். தொடர்ந்து அங்கு மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
The post ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாட்டு பேரணி appeared first on Dinakaran.
