×

திருப்பூர் சத்யா நகர் ஓடை தூர் வாரப்பட்டது

 

திருப்பூர், ஜூலை 21: திருப்பூர் மாநகரில் நொய்யல் ஆற்றின் கிளை ஆறுகள் பல்வேறு பகுதிகளில் செல்கிறது. இவற்றில் சத்யா நகர் பகுதியில் செல்லுகின்ற ஓடையில் செடி கொடிகள் அதிகளவு முளைத்து காணப்பட்டது. இதனால் தண்ணீர் செல்லும் பாதை குறுகலாக்கப்பட்டது.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தண்ணீர் செல்வதற்கு போதிய இடம் இல்லாததால் அவை பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்ல வாய்ப்பு ஏற்படும் என தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது சத்யா நகர் ஓடை தூர்வாரப்பட்டு தண்ணீர் செல்லும் பாதைகளில் ஆக்கிரமித்த செடி, கொடி உள்ளிட்ட களைச் செடிகள் அகற்றப்பட்ட தண்ணீர் செல்லும் பாதை அகலமாக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் தண்ணீர் எந்த வித இடையூறும் இல்லாமல் சென்று சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post திருப்பூர் சத்யா நகர் ஓடை தூர் வாரப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Tirupur Sathya Nagar ,Tirupur ,Noyyal ,Sathya Nagar ,Noyyal… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...