- போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்
- பவானி
- பவானி-அந்தியூர்
- கோயம்புத்தூர் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் சங்கம்
- கோவை கவுன்சில்
- மண்டல தலைவர்
- கல்யாணசுந்தரம்
- பரமசிவம்
- துரைசாமி
- தயாளன்
- அருள்ராஜ்…
- தின மலர்
பவானி, ஜூலை 21: கோவை போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் பவானி-அந்தியூர் கிளை கூட்டம் மற்றும் கோவை பேரவைக்கு பாராட்டு விழா பவானியில் நடந்தது. மண்டலத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர்கள் பரமசிவம், துரைசாமி, தயாளன், அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்தியூர் கிளைத்தலைவர் பாலகுரு வரவேற்றார். கோவை பேரவையின் பொதுச்செயலாளர் ராஜாராம், பொருளாளர் குருநாதன், துணைச் செயலாளர் ராஜசேகரன் சிறப்புரையாற்றினர்.
ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2015ம் முதல் 10 வருடங்களாக போக்குவரத்துக் கழகங்கள் வழங்கவில்லை. இதனால், சட்ட போராட்டத்தின் மூலம் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 70 சதவீதம் கிடைத்தது. பாக்கியுள்ள 30 சதவீத பாக்கியை தர வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
The post போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

