- பாரதிதாசன் கலைக் கல்லூரி மாணவர் சங்க நிர்வாகிகள் அறிமுக விழா
- ஈரோடு
- பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- கல்லூரி செயலாளர்
- NKKB நரேன்ராஜா
- தின மலர்
ஈரோடு, ஜூலை 21: பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி செயலாளர் என்கேகேபி நரேன்ராஜா தலைமை வகித்து பேசுகையில், ‘கல்லூரியின் ஒன்றியங்களில் தேர்வான மாணவர்கள் தலைமைப் பண்போடும், பிறருக்கு வழிகாட்டியாகவும் விளங்க வேண்டும் என்றார். கல்லூரி முதல்வர் பெ.வானதி, ஒன்றிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரி இணைச்செயலாளர் பரிமளா ராஜா, நிர்வாக அலுவலர் இரா.அருள்குமரன் புதிய நிர்வாகிகளுக்கு பெயர்ப்பட்டைகளை அணிவித்தனர்.
முன்னதாக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே.கோகுல்ராஜ், துணைத் தலைவர் ஆர்.பிரவீன், செயலாளர் ஆர்.லோகேஸ்வரி, இணைச்செயலாளர் எம்.பிரவின், பொருளாளர் கே.மோகனராகவி, இணைப் பொருளாளர் ஜே.பி.ரியதர்ஷினி, நுண்கலை மன்றச் செயலாளர் எஸ்.சந்தோஷ், துணைச் செயலாளர் பி.மனோஜ், விளையாட்டுச் செயலாளர் டி.பெரியசாமி, இணைச் செயலாளர்கள் பி.சாய்ராம், எம்.அர விந்த் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
The post பாரதிதாசன் கலை கல்லூரியில் மாணவர் ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக விழா appeared first on Dinakaran.

