×

மின்சார பேருந்தில் பெண் நடத்துனரிடம் பணப்பை திருட்டு

 

பெரம்பூர்: வியாசர்பாடி சஞ்சய் நகரை சேர்ந்தவர் மீனா (49). வியாசர்பாடி பணிமனையில் இருந்து இயக்கப்படும் தடம் எண் 33 சி, என்ற மின்சார பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு பிராட்வே பகுதியில் இருந்து கவியரசு கண்ணதாசன் நகருக்கு சென்ற பேருந்தில், பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்த மீனா, தனது பணப்பையை டிரைவர் இருக்கையின் பின்புறம் வைத்துள்ளார்.

கண்ணதாசன் நகர் பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு, அங்கிருந்து பேருந்தில் ஏறிய பயணிகளிடம் டிக்கெட் வசூலிக்க பணப்பை மற்றும் டிக்கெட் மிஷினை தேடிய போது மாயமானது தெரிந்தது. இதையடுத்து பேருந்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது முல்லை நகர் பகுதியில் ஒரு பயணி, பணப்பையை எடுத்துக் கொண்டு இறங்குவது பதிவாகியிருந்து.

அந்த பையில் அவரது செல்போன், டிக்கெட் வழங்கும் மிஷின் மற்றும் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம் இருந்துள்ளது. இதுகுறித்து மீனா கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மின்சார பேருந்தில் பெண் நடத்துனரிடம் பணப்பை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Perampur ,Meena ,Viasarpadi Sanjay City ,Track ,Vyasarpadi ,Broadway ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு