×

பைக்கில் குட்கா கடத்திய வடமாநில வாலிபர்கள் கைது

 

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, பென்னலூர் கிராமம் அருகே நேற்று முன்தினம் இரவு பெருநகர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 5 கிலோ அளவு கொண்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து பெருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வட மாநிலத்தை சேர்ந்த துளசிராமன்(29), அகிலேஷ்குமார்(25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த பெருநகர் போலீசார் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பைக்கில் குட்கா கடத்திய வடமாநில வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Northern ,State ,Uthiramerur ,Metropolitan Police ,Bennalur ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...