×

நெடுங்குன்றம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

 

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், நெடுங்குன்றம், கொளப்பாக்கம், அண்ணா நகர், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், மப்பேடுபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் வனச்சரகம் மற்றும் நெடுங்குன்றம் ஊராட்சி மன்றம் சார்பில் மக்களிடையே பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி சதானந்தபுரம்-நெடுங்குன்றம் சாலை ஓரத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், சென்னை மாவட்ட வன அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நெடுங்குன்றம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீசீனிவாசன் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில், வெங்கடேஸ்வரா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, பிரின்ஸ் கல்லூரி, எஸ்ஆர்எம் கல்லூரி, குருநானக் கல்லூரியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாலை ஓரத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர். பின்னர், பொதுமக்களிடம் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

The post நெடுங்குன்றம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Plastic eradication awareness ,Nedungunram panchayat ,Kuduvanchery ,Vandalur ,Chengalpattu district ,Nedungunram ,Kolapakkam ,Anna Nagar ,Sadanandapuram ,Alapakkam ,Mappeduputhur ,Tambaram Vanacharagam ,Nedungunram panchayat… ,Plastic eradication awareness rally ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...