வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 83.091 மெட்ரிக் டன் பருத்தி ஏலம்

வலங்கைமான், ஜூலை 20: வலங்கைமானில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 83.091 மெட்ரிக் டன் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.7ஆயிரத்து 569 க்கும் சராசரியாக ரூ.7 ஆயிரத்து 443. க்கும்விற்பனையானது. மேற்படி ஏலத்தில் ரூ.61.85 லட்சம் மதிப்பிலான பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தினை திருச்சிராப்பள்ளி விற்பனை குழு செயலாளர் ரவி மற்றும் தேசிய வேளாண் சந்தை தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ஸ்டான்லி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர் .

டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடி ஆக பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14 ஆயிரம் எக்டேரில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் ஆதிச்ச மங்கலம், சந்திரசேகரபுரம் கோவிந்தகுடி மருவத்தூர் மேல விடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 6ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வலங்கைமானில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் தேசிய வேளாண் மின்னணு சந்தைத் திட்டத்தில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஆன்லைனில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் 573 விவசாயிகள் கொண்டு வந்த 83.091 மெட்ரிக் டன் பருத்தியை ஏலமிடப்பட்டதில் கும்பகோணம். கொங்கணாபுரம் திருப்பூர், பண்ருட்டி. செம்பனார்கோயில் பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டனர் . இதில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.7ஆயிரத்து 569 க்கும் சராசரியாக ரூ.7 ஆயிரத்து 443. க்கும்விற்பனையானது. மேற்படி ஏலத்தில் ரூ. 61.85 லட்சம் மதிப்பிலான பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தினை திருச்சிராப்பள்ளி விற்பனை குழு செயலாளர் ரவி மற்றும் தேசிய வேளாண் சந்தை தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ஸ்டான்லி ஆகியோர் ஆய்வு செய்தனர் .

விவசாயிகள் பருத்தியைநன்கு காய வைத்து அயல்பொருள்களின்றி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்குக் கொண்டு வந்து நல்ல விலைக்குவிற்று பயனடையும்படி திருவாரூர் விற்பனை கூட செயலாளர் கண்ணன் மற்றும் வலங்கைமான் விற்பனை கூட மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

The post வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 83.091 மெட்ரிக் டன் பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: