மன்னார்குடி, ஜூலை 20: பெருகவாழ்ந்தானில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் 494 மனுக்கள் குவிந்தன. மகளிர் உரிமைத் தொகை கோரி 284 பேர் விண்ணப்பித்தனர். இந்த முகாம்கள் மூலம் நகர்ப் புற பகுதிகளில் 13 துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதி களில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப் படுகிறது.
இந்த நிலையில், கோட்டூர் தெற்கு ஒன்றியம் பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் நேற்று நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை தமிழக அர சின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் துவங்கி வைத்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் தேவதாஸ், வடக்கு ஒன்றிய செயலாளர் பாலஞானி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கலைவாணி மோகன் முன்னிலை வகித்தனர்.இம்முகாமில், பெருகவாழ்ந்தான், நொச்சியூர், செருகளத்தூர் ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் கலந்து கொண்டு பொது மனுக்கள் 210, மகளிர் உரிமை தொகை கேட்டு 284 மனுக்கள் என 494 மனுக்களை ஆர்வத்துடன் அளி த்தனர்.
முகாமை மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், மாரிமுத்து எம்எல்ஏ ஆகியோர் பொதுமக்கள் மனுக்கள் வழங்குவதை ஆய்வு செய்து பயனாளிகளுக்கு வேளாண் இடுப்பொருட்கள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கினர். முகாமில், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 284 பேர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பம் appeared first on Dinakaran.
