தஞ்சையில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர், ஜுலை 20: தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட பகுதிகளில் தொலைந்து போன 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள 100 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பொது மக்களிடமிருந்து திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன செல்போன் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 செல்போன்களை மீட்ட காவல்துறையினர் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கலந்து கொண்டு செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் பேசிய அவர், ஐஎம்இஐ நம்பர் மாற்றக்கூடிய இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பம் மூலம் செல்போன்களை காவல்துறையினர் மீட்கப்பட்டு இருப்பது பெருமைக்குரிய விஷயமாகும் என்றார்.

The post தஞ்சையில் காணாமல் போன 100 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: