புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை வெப்பத்திலிருந்து வேளாண் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்

புதுக்கோட்டை, ஜூலை 20: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் அதிக வெப்பத்தின் காரணமாக பயிர்களில் இருந்து அதிகளவில் நீர் வெளியேறிவதால் பயிர்கள் சுணங்கி பூ, பிஞ்சு உருவாதல் குறைந்து மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது, இம்மாவட்டத்தில் நெல், உளுந்து கடலை மற்றும் எள், கரும்பு, பருத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் ஆகியன பூ மற்றும் காய் பிடிக்கும் தருணம் என பல்வேறு நிலைகளில் உள்ளன.

இப்பயிர்களில், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பின்வரும் தொழில்நுட்படங்களை பயன்படுத்தி உரிய மகசூல் பெறலாம். நெல் பயிர்கள்:இலை வழி தெளிப்பாக 3 சதவிகிதம் கயோலின் அல்லது 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை குறிப்பிட்ட வளர்ச்சி பருவம் முறையே தூர் கட்டும், கதிர் உருவாகும் மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். பி.பி.எப்.எம் (மெத்தைலோ பாக்டீரியம்) நுண்ணுயிர்யினை இலை வழி தெளிப்பாக ஏக்கருக்கு 200 மிலி அளவு 200 லிட்டர் நீரில் கலந்து கதிர் உருவாகும் மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். இலை வழி தெளிப்பாக 2 சதவிகிதம் மோனோ அமோனியம் பாஸ்பேட் மற்றும் 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை பூப்பதற்கு 15 நாட்கள் முன்பாக மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிப்பதன் மூலம் தானிய எடை மற்றும் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

குறுவை பட்டத்தில் இலை வழி தெளிப்பாக 1 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு + 500 பிபிஎம் சைக்கோசெல் பயிர் வளர்ச்சி பருவத்தில் (தூர் கட்டும் மற்றும் கதிர் உருவாகும்) தெளிக்க வேண்டும். விதைப்பதற்கு முன்னதாக சிறுதானியம் பயிர்களுக்கு நுண்ணூட்டம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ இட வேண்டும். மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மக்காச்சோள மேக்சிம் 3 கிலோ என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை வழி தெளிப்பாக கதிர் அரும்பும் தருணத்தில் தெளிப்பதன் மூலம் கதிர் அதிகம் பிடித்து, மகசூல் அதிகரித்து மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை அளிக்கிறது.

பயறு வகை: விதைப்பதற்கு முன்னதாக பயறு வகை நுண்ணூட்டம் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ இட வேண்டும். மேலும் வறட்சி மேலாண்மையாக 2 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு மற்றும் 100 பி.பி.எம்.போரான் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். இலை வழி தெளிப்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பயறு ஒண்டரை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை வழி தெளிப்பாக பூக்கத் தொடங்கும் பருவத்தில் அளிப்பதன் மூலம் பூ உதிர்தல் குறைத்து, அதிக மகசூல் மற்றும் வறட்சியை தாங்கி வளருகிறது. இலை வழி தெளிப்பாக ஒரு லிட்டர் தண்ணீரில் என்.ஏ.ஏ 40 பி.பி.எம் (40 மில்லி கிராம்) அல்லது சாலிசிலிக் அமிலம் 100 மில்லி கிராம் கலந்து பூக்கும் பருவத்திலும் மற்றும் 15 நாட்கள் கழித்தும் தெளிக்க வேண்டும்.

இலை வழி தெளிப்பாக பொட்டாஸ் 2.5 சதவிகிதம் மற்றும் யூரியா 2,5 சதவிகிதம் கரைசலை வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். நடவு செய்த 120ம் நாள் கூடுதலாக எக்டருக்கு 125 கிலோ பொட்டாஸ் மண்ணில் இட வேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கரும்பு பூஸ்டரை எக்டருக்கு 1.0, 1.5 மற்றும் 2 கிலோ என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்து 45, 60 மற்றும் 75 ஆம் நாள் இலை வழி தெளிப்பான் அளிப்பதன் மூலம் கரும்பின் வளர்ச்சி, எடை, கணுவின் நீளம், மகசூல், சர்க்கரை அளவு மற்றும் வறட்சியை தாங்கும் தன்மையை அதிகரிக்கலாம்.

காய்ந்த தோகைகளை 5-வது மாதம் உரித்து கரும்பு வரிசைக்கு இடையே பரப்ப வேண்டும். மறுதாம்பு பயிர்களில் தோகையினை எரிக்காமல் கரும்பு பயிர்களுக்கு இடையே பரப்புவதனால் நீர் தேவையினை வெகுவாக குறைக்கலாம். நிலக்கடலையில் பூ உதிர்வதை தவிர்த்து, பொக்கற்ற காய்களை பெறுவதற்கும் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மையை அதிகரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் நிலக்கடலை ரிச் எக்டருக்கு 5.0 கிலோ (ஒவ்வொரு தெளிப்பிற்கும்) என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து இரண்டு தெளிப்பாக விதைத்த 35-ம் நாள் (50 சதவிகிதம் பூக்கும் சமயத்தில்) மற்றும் விதைத்த 45- ஆம் நாள் (காய் முற்றும் பருவம்) தெளிக்க வேண்டும். மேலும் விதைப்பதற்கு முன்பாக நிலக்கடலை நுண்ணூட்டம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ இட வேண்டும்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பருத்தி ப்ளஸை ஏக்கருக்கு 2.5 கிலோ என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை வழி தெளிப்பாக அளிப்பதன் மூலம் பூ உதிர்தல் குறைத்து, காய் வெடித்தல், விதை பருத்தி மகசூல் அதிகரித்து மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மையை அளிக்கிறது. கோடை இறவை பருத்திக்கு ஒரு சத பொட்டாஸ் கரைசலை விதைத்த 50 மற்றும் 70ம் நாட்களில் தெளிப்பதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இலை வழி தெளிப்பாக என்ஏஏ 40 பிபிஎம் (4 மில்லி பிளானோபின்ஸ் / 4.5 லிட்டத் தண்ணீர்) கரைசலை மொட்டு விடும் பருவத்தில் (விதைத்த 60-ம் நாள்) தெளிப்பதன் மூலம் மொட்டுகள் உதிர்வது குறைத்து காய்கள் அதிகம் பிடிக்க உதவுகிறது.

மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயிர்களை பாதுகாத்திடலாம என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை ஆலோசனை பயறு வகைகளை விதைப்பதற்கு முன்னதாக பயறு வகை நுண்ணூட்டம் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ இட வேண்டும். மேலும் வறட்சி மேலாண்மையாக 2 சதவிகிதம் பொட்டாசியம் குளோரைடு மற்றும் 100 பி.பி.எம்.போரான் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை வெப்பத்திலிருந்து வேளாண் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் appeared first on Dinakaran.

Related Stories: