அறந்தாங்கி ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை சார்பில் முதல்வரின் வீடு மறு கட்டமைப்பு திட்ட பணிகள்

அறந்தாங்கி, ஜூலை 20: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் முதல்வரின் வீடு மறு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்ட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர் அருணா நேரில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் கிராம பகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கிராமப்புறங்களில் சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, சுகாதார வசதி பள்ளி கட்டடங்கள், அங்கன்வாடி மைய கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் எத்தனை கோட்டை ஊராட்சியில் முதல்வரின் வீடு மற்றும் மறு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் பழைய வீடு பகுதியில் 80 வீடுகளும் மூக்குடி சாலை பகுதியில் 49வீடுகளும் கூத்தாடிவயல் சாலை பகுதியில் 73 வீடுகளும் என மொத்தம் 202 பழைய வீடுகளை அகற்றி புதிய வீடுகள் கட்டும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்ப்பட்டது

மேலும், அனைத்து கான்கிரீட் அடித்தளம் கட்டும் பணியினை 2 நாட்களில் நிறைவு செய்யவும் வீடுகளை 2 மாதங்களில் முழுமையாக கட்டக முடித்திடவும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த பகுதியில் தொடர்ந்து குடிநீர் வழங்குவது குறித்தும் சாலை வசதி ஏற்படுத்துவது குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டும் இத்தகைய வளர்ச்சி திட்ட பணிகளை தொடர்புடைய அரசு அலுவலர்கள் விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் ஆட்சி தலைவர் அருணா அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக முகமை திட்ட இயகுநர் ஜெயசுதா, உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post அறந்தாங்கி ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை சார்பில் முதல்வரின் வீடு மறு கட்டமைப்பு திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: