நாகப்பட்டினம்,ஜூலை20: நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிராக மனித சங்கிலி நடந்தது. முதல்வர் (பொ) அஜிதா தலைமை வகித்தார். நாகப்பட்டினம் அவுரித்திடலிருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தை சென்றடைந்தது. மாவட்ட சட்டப் பணிகள் தன்னார்வலர் வினோதினி பேரணியை தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அன்வர்அஹமது, போதைப் பொருள் எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மதியரசன், உடற்கல்வி இயக்குநர் சின்னையன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாணவர்களை கல்லூரி ஆசிரியர்கள் மெய்யழகி, கவிப்பிரியா ஆகியோர் நெறிப்படுத்தினர்.
The post நாகை அரசுகலை கல்லூரி சார்பில் போதை பொருட்களுக்கு எதிராக மனித சங்கிலி appeared first on Dinakaran.
