நாகப்பட்டினம், ஜூலை20: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். சிங்காரவேல், மோகன், முகமதுஆரிப், நடராஜன், மீனாட்சி, சீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன். மாநில தலைவர் ஜெயசந்திரராஜா, டாஸ்மாக்பணியாளர் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் மகேந்திரன் ஆகியோர் பேசினர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் குடோன்களில் இருந்து வரும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும். பொருட்கள் அனைத்தையும் பணியாளர்கள் முன்பு எடையிட்டு வழங்க வேண்டும். கட்டுப்பாடு அற்ற பொருட்களை கட்டாயமாக இறக்குவதை கைவிட்டு விற்பனையாளர்கள் தேவைக்கு ஏற்ப பொருட்கள் வழங்க வேண்டும். பெண் பணியாளர்கள் பணியுரியும் நியாயவிலைக்கடைகளில் இரவு 6 மணிக்கு முன்பே பொருட்கள் இறக்க வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
The post 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
