வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா

வேதாரண்யம், ஜூலை 20: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம், நான்கு வேதங்களும் பூஜித்த தலம்.

இங்குள்ள வேதநாயகி அம்மனுக்கும், சரஸ்வதிக்கு சரஸ்வதியின் வீணையின் ஒலி இனிமையானதா? அம்மனின் குரல் வலிமை இனிமையானதா என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது வீணையின் ஒலியை விட அம்மனின் குரல் இனிமையானதாக இருந்ததால், இந்த கோயிலில் உள்ள சரஸ்வதி வீணை இல்லாமல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனால் இந்த அம்மனுக்கு யாழை பழித்த மொழியம்மை என்ற பெயர் வரலாயிற்று.

இப்படி சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் வேதநாயகி அம்மன் ஆடிப்பூரத் திருவிழா நேற்று 19.07.25 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் கோவில் நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், யாழ்பாணம் வரணீ ஆதினம் செவ்வந்தி நாத பண்டார சந்நிதி, ஆதிவார மடம் நிர்வாகி குமரேசமூர்த்தி, ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி தினசரி அம்மன் காமதேனு, அன்னபட்சி, இந்திர விமானம், பூதவாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், கைலாசவாகனம் ஆகியவற்றில் வீதியுலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை உபயதாரர்களும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.

The post வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: