×

தொட்டபெட்டா சாலையில் பகல் நேரத்தில் கரடி நடமாட்டம்: சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்

ஊட்டி, ஜூலை 20: ஊட்டி அருகே தொட்டபெட்டா சாலையில் பகல் நேரத்திலேயே வலம் வந்த கரடியை கண்டு சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. காட்டு மாடு, கரடி, சிறுத்தை, யானை, புலிகளின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்துள்ளது. துவக்கத்தில் இரவு நேரங்களில் மட்டுமே உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்லும். தற்போது பகல் நேரங்களிலேயே குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத்துவங்கியுள்ளன.

குறிப்பாக, கரடிகள் மற்றும் சிறுத்தைகள் தினமும் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வரத்துவங்கியுள்ளன. மேலும், வனங்களை ஒட்டியுள்ள சாலைகள், பள்ளி வளாகங்கள் மற்றும் நெடுஞ்சாலையிகளில் பகல் நேரங்களிலேயே வலம் வருகின்றன. இதனால், பொதுமக்கள், வளர்ப்பு பிராணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போது விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்றும் ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டா செல்லும் சாலையில் பகல் நேரத்திலேேய ஒரு கரடி வலம் வந்தது.

இதனை வானங்களில் வந்த சுற்றுலா பயணிகள் சிலர் புகைப்படம் எடுத்தனர். மேலும், வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சுற்றுலா பயணிகள் யாரும் எதிர்பார்க்காத நிலையில், சாலையில் வலம் வந்த கரடியை கண்டு சில சுற்றுலா பயணிகள் ஓட்டமும் பிடித்தனர். தற்போது சுற்றுலா தலங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் இது போன்ற ஆபத்து நிறைந்த வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

The post தொட்டபெட்டா சாலையில் பகல் நேரத்தில் கரடி நடமாட்டம்: சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Dodtapetta ,Ooty ,Dodtapetta road ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...