பூக்கள் பறிக்கும் தொழிலாளர்கள் அவினாசி ரோடு மேம்பாலத்தில் பாதசாரிகளுக்காக நடை மேம்பாலம் கட்ட அனுமதியில்லை

கோவை, ஜூலை 20: கோவை அவினாசி ரோடு மேம்பாலம் 10.1 கி.மீ தூரத்திற்கு 1623 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. இதில் இந்த பணிகள் 96 சதவீதம் முடிந்து விட்டது. ஹோப் காலேஜ் பகுதியில் ரயில் பாதை மீது பாலம் அமைக்க வேண்டியுள்ளது. 52 மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்க ஐதராபாத்திலிருந்து 900 டன் எடையில் 8 இரும்பு தூண்கள் பெறப்பட்டது. இந்த இரும்பு கர்டர்கள் பாலத்தின் இரும்பு தளத்தில் கிரேன் மீது வைக்கும் பணி 4 நாட்கள் நடந்தது. இதற்காக ராட்ச கிரேன் கொண்டு வரப்பட்டு பணிகள் செய்யப்பட்டது.

இரும்பு கர்டர்கள் பணி முடிந்த நிலையில் 52 மீட்டர் தூரத்திற்கு டெக் சிலாப் என்ற கான்கிரீட் தளம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. இந்த பணிக்காகவும் போக்குவரத்து நிறுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. பணி நடக்கும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வாரம் இந்த பணி நடக்கவும், போக்குவரத்து மாற்றம் ஒரிரு நாட்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணிகள் முடிந்தால் 3 இடத்தில் ரேம்ப் பணிகள் பாக்கி உள்ளது. இந்த பணிகள் முடிந்து வரும் செப்டம்பர் மாதம் பாலம் திறக்கப்படவுள்ளது. 17.25 மீட்டர் அகலத்தில் எலிவேட்டர் காரிடார் என்ற பெயரில் தமிழகத்தில் நீண்ட மேம்பாலம் என்ற பெருமை அவிநாசி ரோடு மேம்பாலத்திற்கு கிடைக்கவுள்ளது.

இந்த மேம்பாலத்தில் பாதசாரி நடந்து செல்ல நடை மேம்பாலம் (எப்ஓபீ) அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், மெட்ரோ ரயில் நிர்வாகம், மேம்பாலத்தை ஒட்டி பணிகள் செய்யவுள்ளது. குறிப்பாக, ஹோப் காலேஜ், பீளமேடு சந்திப்பு, லட்சுமி மில்ஸ், சித்ரா, ஏர்போர்ட் சந்திப்பு பகுதியில் மெட்ரோ ரயில் ஸ்டேஷன் வரவுள்ளது. பாதசாரிகளுக்கான நடை மேம்பாலம் கட்டினாலும், மெட்ரோ ரயில் திட்டம் வரும் போது அந்த பாலத்தை உடைக்க வேண்டிய நிலை வந்து விடும். இதன் காரணமாக நடை மேம்பாலம் இன்றி மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மேம்பாலத்தில் நடந்து செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. பாலத்தின் கீழ் பகுதியில் பிளாட்பாரம், மக்கள் ரோட்டை கடக்க ஜீப்ரா மற்றும் பெலிக்கன் கிராசிங் உள்ளது என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

The post பூக்கள் பறிக்கும் தொழிலாளர்கள் அவினாசி ரோடு மேம்பாலத்தில் பாதசாரிகளுக்காக நடை மேம்பாலம் கட்ட அனுமதியில்லை appeared first on Dinakaran.

Related Stories: