ஈரோடு, ஜூலை 20: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 17ம் தேதி கனமழை பெய்தது. இதனால், சில இடங்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் தேங்கி நிற்பதாகவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், முதற்கட்டமாக, ஈரோடு மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட சங்கு நகரில், டெங்கு தடுப்புப்பணிகள் நேற்று காலை நடைபெற்றது. இப்பணியை மாநகர நலஅலுவலர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
அப்போது, கொசு மருந்து புகை அடித்தல், அபேட் மருந்து தெளித்தல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தல் உள்ளிட்டவைகள் குறித்து டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு, அவர் அறிவுறுத்தினார்.
மேலும், கழிவுபொருட்கள் எதுவும் கால்வாயில் தேங்காத வகையில், அதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், கால்வாயில் இருந்து எடுக்கப்பட்டிருந்த கழிவு பொருட்களை காற்று அதிகம் அடிப்பதால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தூய்மை பணியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார். டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் மாநகர நலஅலுவலர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, சுகாதார ஆய்வாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
சுவர் இடிந்து விழுந்ததால் கடைகள் சேதம்
அதிமுக ஆட்சியில் பெயரளவிற்கு சீரமைப்பு மற்றம் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டதால், நேற்று அதிகாலை பவானி சாலையில் உள்ள வஉசி பூங்காவின் சுற்றுச்சுவர் வலுவிழந்து இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும், சுற்றுச்சுவரையொட்டி தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சிற்றுண்டி கடை மற்றும் தள்ளுவண்டி கடைகள் சேதமானது. சுவர் உறுதிதன்மை இழந்து இடிந்து விழுந்துள்ளது’’ என்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
வஉசி பூங்கா சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த தகவல் அறிந்ததும் ஈரோடு மாநகராட்சி துணை ஆணையர் தனலட்சுமி தலைமையில், மாநகர தலைமை பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் ஸ்வரன் சிங் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, அதிகாரிகள் உத்தரவின்பேரில் இடிந்துவிழுந்த சுவர்கள் அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த சுற்றுச்சுவர் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்ததால் சுவர் உறுதிதன்மை இழந்து இடிந்து விழுந்துள்ளது’’ என்றனர்.
The post மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

