×

ஆத்தூர் பகுதிகளில் பரவலாக மழை

நரசிங்கபுரம், ஜூலை 20: ஆத்தூர், தலைவாசல், நரசிங்கபுரம் பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. மழையை பயன்படுத்தி, விவசாயிகள் உழவு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். ஆத்தூர், கொத்தம்பாடி, நரசிங்கபுரம், செல்லியம்பாளையம், அம்மம்பாளையம், காட்டக் கோட்டை, நாவக்குறிச்சி, நத்தக்கரை, பெரிய ஏரி, ஆறகளூர், மணி விழுந்தான், தேவியாக்குறிச்சி போன்ற பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனால் இந்தாண்டு நல்ல விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post ஆத்தூர் பகுதிகளில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Tags : Athur ,Narasinghapuram ,Thalaivasal ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்