×

கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1910 கோடி வங்கிக் கடனுதவி 29,620 குழுக்கள் நேரடி பயன்: சுயதொழில் வாய்ப்புகள் அதிகரிப்பு திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு

திருவண்ணாமலை, ஜூலை 20: திருவண்ணாமலை மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1910 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் முன்னேற்றம்தான் ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளம். எனவே, பெண்களுக்கு சொத்துரிமை, அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவித இடஒதுக்கீடு, காவல் துறையில் பெண்கள் நியமனம், திருமணநிதியுதவித் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு இயக்கம் என வியக்கத்தக்க திட்டங்களை கலைஞர் ஏற்படுத்தினார்.

அவரது எண்ணங்களை தொடர்ந்து ஈடேற்றும் வகையில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்களில் தனி கவனமும், அக்கறையும் செலுத்தி வருகிறார். குறிப்பாக, பெண்கள் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு, அதற்கான திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படுகின்றன. குறிப்பாக, விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதிகள் போன்றவை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், மகளிர் குழுக்களின் செயல்பாடுகளில் மாநில அளவில் முக்கிய இடம் பிடித்துள்ளது திருவண்ணாமலை மாவட்டம்.

எனவே, மகளிர் குழுக்களுக்கு உரிய உதவிகளை வழங்கி ஊக்கப்படுத்த அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரகம் மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் குழுக்களுக்கு பல்வேறு வகையில் வழிகாட்டுதலும், ஊக்கமும் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 2643 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.96 கோடிஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 3514 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.28.47 கோடி சமுதாய முதலீட்டு நிதியும், 29620 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1910.08 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்பு மற்றும் பெருங்கடன் பெற்று வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 1003 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.50 கோடி ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளன. அதன்மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் குழுக்கள் சுய தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளன. அதோடு, வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதிலும் திருவண்ணாமலை மாவட்ட மகளிர் குழுக்கள் முதலிடத்தில் உள்ளன. இறங்கி தப்பியோட முயன்ற இரண்டு பேரை விரட்டிப் பிடித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஜவ்வாதுமலை பகுதியைச் சேர்ந்த மாட்டுக்காளூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன்(28), அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜீத்(34) என்பது தெரியவந்தது.

மான் மற்றும் காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டையாடுவதற்காக காப்புக்காடு பகுதிக்கு அடிக்கடி இவர்கள் வந்துசெல்வது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து, அனுமதியில்லாத நாட்டுத் துப்பாக்கி மற்றும் சல்பர் மருந்து மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு, இருவரையும் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1910 கோடி வங்கிக் கடனுதவி 29,620 குழுக்கள் நேரடி பயன்: சுயதொழில் வாய்ப்புகள் அதிகரிப்பு திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai district ,Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...