- வனத்துறை?: பொது
- காரைக்கிளி ஊராட்சி
- மதுராந்தகம்
- நெல்வாய் கூட்ரோடு
- ஆச்சிருபாக்கம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- வெள்ளபுதூர்
- தின மலர்
மதுராந்தகம், ஜூலை 20: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் நெல்வாய் கூட்ரோடு பகுதியில் இருந்து கரிக்கிலி ஊராட்சி வழியாக வெள்ளபுத்தூர் வரை செல்லும் சுமார் 4கி.மீ தூரத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் சாலை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், கரிக்கிலி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 1200 மீட்டர் தூரம் கொண்ட பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சாலையை சீரமைக்க வனத்த்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால், சாலை சீரமைப்பு பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.இதுதொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் கடந்த மாதம் 26ம் தேதி படத்துடன் செய்தி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள, கரிக்கிலி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகிகள் இணைந்து சாலை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டனர். `இதனைத்தொடர்ந்து வனத்துறையின் கட்டுப்பாட்டி இருந்த 1200 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்தது. சுமார் 4 கி.மீ தூரம் கொண்ட தார் சாலை சீரமைக்கும் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
The post கரிக்கிலி ஊராட்சியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1200 மீட்டர் தார் சாலை சீரமைப்பு பணிகள் நிறைவு appeared first on Dinakaran.
