திருப்பூர், ஜூலை 19: சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாதர் சம்மேளனத்தினர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா பற்றி குறிப்பிட்டு பேசும்போது பெண்கள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசினார். அவரது கருத்துகளுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய மாதர் தேசிய சம்மேளன புறநகர் மாவட்ட செயலாளர் நதியா தலையில் திருப்பூர் எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருப்பூரில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா பற்றி பேசும்போது பெண்கள், மாதர் சங்கத்தினர் இப்பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் எங்கே போய் படுத்துக்கிடந்தார்கள்?
கஞ்சா, கொக்கைன் சாப்பிட்டு கிடக்கிறார்களா? என அருவருக்க தக்க வகையில் மிகவும் மோசமாக பேசியுள்ளார். இது போன்று பெண்களையும், பெண்கள் அமைப்பையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே சீமான் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
The post சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.
