×

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

 

திருப்பூர், ஜூலை. 19: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் உள்ள வெள்ளிக்கிழமைகளில் அம்மன்கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள்.

ஆடி மாதத்தில் உள்ள அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் பக்தர்களால் விசேசமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் அனைத்திலும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் அன்னப்பச்சி வாகனம் அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.

திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் அம்மன் வேப்பிலை அலங்காரத்தில் காட்சியளித்தார் இதுபோல் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் முத்தங்கி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். இதுபோல் கோட்டைமாரியம்மன் கோவில் உள்பட மாநகர் பகுதிகளில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.

The post ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Amman temple ,Aadi ,Tiruppur ,Amman ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...