×

சாரல் மழையால் கடும் குளிர்

 

கோத்தகிரி, ஜூலை 19: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரங்களில் வெப்பமும், மாலை நேரங்களில் மிதமான குளிரும் சூழ்ந்த காலநிலை நிலவியது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டு பிற்பகலில் கட்டபெட்டு, பெட்டட்டி, வெஸ்ட்புரூக், பாண்டியன் பார்க், ஒரசோலை, தாந்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து காலநிலையில் மாற்றம் ஏற்படாமல் மாலை நேரத்திலும் அவ்வப்போது சரால் மழை பெய்து வருவதால் சாலையோர வியாபாரிகள், பாதசாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர்.

The post சாரல் மழையால் கடும் குளிர் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...