×

மாயார் பகுதியில் வயதான புலி வலம் வருவதால் மனிதர்களை தாக்கும் அபாயம்

ஊட்டி,ஜூலை19: ஊட்டி அருகே மாயார் பகுதியில் பகல் நேரங்களில் உலா வரும் புலியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஊட்டி அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.வெளி மண்டல வனப் பகுதியில் அமைந்துள்ள மாயார் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பலர் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மாயார் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி ஒன்று பகல் நேரத்திலேயே சாலை மற்றும் குடியிருப்பை ஒட்டிய பகுதிகளில் உலா வருகிறது. வயது முதிர்வு காரணமாக இந்த புலி, கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும், ஒரு கட்டத்தில் மனிதர்களை தாக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாயார் பகுதியில் வயதான புலி வலம் வருவதால் மனிதர்களை தாக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Mayar ,Ooty ,Mudumalai Tiger Reserve ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...