பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அரசு ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

 

கோவை, ஜூலை 19: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாட்டை நீக்கி, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிக்டோ ஜாக்) போராட்டம் நடத்தி வருகிறது.

நேற்று 2வது நாளாக மறியல் போராட்டம் நடந்தது. கோவை கலெக்டர் அலுவவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வீராசாமி தலைமை தாங்கினார். இதில், கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

பின்னர் சிறிது நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘‘தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அரசு ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: