×

கொல்லம்பாளையம் பள்ளியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

ஈரோடு, ஜூலை 19: ஈரோடு, கொல்லம்பாளையம் நகரவை மேல்நிலைப்பள்ளியில் புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் டாக்டர் கலைசெல்வி தலைமை வகித்தார். புகையிலை தடுப்புக்குழுவைச் சேர்ந்த சமூக சேவகர் சங்கீதா, பள்ளித் தலைமைஆசிரியர் தேன்மொழி, புகையிலை தடுப்புக்குழு செயலாளர் சுரேஷ்,

மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், சுகாதார அலுவலர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்து, போதை மற்றும் புகையிலையின் வகைகள், அதில் கலந்துள்ள நச்சு பொருட்கள், அதனால் மனிதருக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து, மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 200 பேர் கலந்துகொண்டனர்.

The post கொல்லம்பாளையம் பள்ளியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : -tobacco awareness ,Kollampalayam School ,Erode ,Kollampalayam Nagara Higher ,Secondary ,School ,District Tobacco Prevention ,Advisor ,Dr. ,Kalaiselvi ,Tobacco Prevention Committee… ,Dinakaran ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...