சென்னை, ஜூலை 19: சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்திலுள்ள நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில்அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, கணக்கெடுப்பிற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனங்களின் மூலம் ஈடுபடுத்தப்பட்டுள்ள முன்களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி, மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது.
இப்பணி ஜூலை மாதம் தொடங்கி, செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடத்தப்படும் கணக்கெடுப்பிற்காக தங்கள் வீடுகளுக்கு வரும் முன்களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளித்து, மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் சிறப்பாக செவ்வனே நடைபெற உதவ வேண்டும். என கூறப்பட்டுள்ளது.
The post சென்னையில் இல்லம்தோறும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: முன்கள பணியாளர்களுக்கு ஒத்துழைக்க கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
